பூமிக்கு அடியில் செல்லும் மின்சார வயரில் ஏற்பட்ட மின்கசிவு - மழை தண்ணீர் பட்டு பட்டாசு போல வெடித்தது
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.) சென்னை, அண்ணாநகரில் உள்ள அஜந்தா காலனி பகுதியில் குடியிருப்பு வளாகம் அருகில் பூமிக்கு அடியில் செல்லக்கூடிய மின்சார இணைப்பில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மழை பெய்து வந்ததில் மின்கசிவில் தண்ணீர் பட்டதன் கார
Chn


சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)

சென்னை, அண்ணாநகரில் உள்ள அஜந்தா காலனி பகுதியில் குடியிருப்பு வளாகம் அருகில் பூமிக்கு அடியில் செல்லக்கூடிய மின்சார இணைப்பில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மழை பெய்து வந்ததில் மின்கசிவில் தண்ணீர் பட்டதன் காரணமாகபூமிக்கு மேலே பட்டாசு வெடிப்பது போல மேலே தீப்பற்றி எறிந்தது.

இது குறித்து மின்சார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மேலும், அண்ணாநகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீயை வாளிகளில் மணல் கொண்டு வந்து கொட்டித் தீயை அணைத்தனர்.

மேலும் மழைக்காலத்தில் மின்சார இணைப்புகள் மற்றும் மின் மாற்றிகள் உள்ள இடங்களுக்கு மக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் தீயணைப்பு துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ