Enter your Email Address to subscribe to our newsletters
தென்காசி, 20 அக்டோபர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.
இந்த நிலையில், குற்றால மெயின் அருவியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக இரண்டாவது பாலத்தில் இருந்த தடுப்புகள் மற்றும் அங்கு போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்த பேரிக்கார்டுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், குற்றால அருவியானது சற்று உருக்குலைந்து காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய தினம் 5-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வெள்ளப்பெருக்கை காண்பதற்காக ஆபத்தை உணராமல் பாலத்தில் நின்றபடி அருவி முன்பு புகைப்படம் எடுத்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகளில் பாதுகாப்பு கருதி தடுப்புகள் உடைந்துள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN