Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இன்று (அக்.,20) நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் என பல நகரங்களிலும் நள்ளிரவு வெடி வெடித்து தீபாவளியை மக்கள் வரவேற்றிருக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையன்று மக்கள் அதிகாலை எழுந்து உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்கின்றனர்.
இப்புனித நாளில் இவ்வாறு எண்ணெய் தேய்த்து குளித்தால் கங்கை நதியில் குளித்த பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இன்று புத்தாடை மற்றும் விதவித இனிப்புகள் பலகாரங்களை பூஜை அறையில் வைத்து கடவுளை மக்கள் வணங்கிய மக்கள் பின் புத்தாடை அணிந்து கோவில்களுக்கும் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன், தஞ்சை பெரிய கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம். மேலும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்,மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர்.
இதனையடுத்து சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டிருக்கின்றன. அதேபோல தி.நகர், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் துணிக்கடை, பட்டாசு மற்றும் இனிப்பு கடைகளில் கூட்டம் அலைமோதி உள்ளது.
சென்னை மட்டுமல்லாது கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருப்பூர், வேலூர், தஞ்சை என இரண்டாம் தர நகரங்களிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
இந்நகரங்களில் நள்ளிரவு 12 மணியை தாண்டி பல கடைகளில் விற்பனை தீவிரமாக நடந்திருக்கிறது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b