தீபாவளி பலகாரம் அருமையா இருக்கு இந்தாங்க பரிசு - முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை, 20 அக்டோபர் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள ஜீவாநகர், விளாப்ட்டி மற்றும் இலுப்பூர் கடைவீதி பகுதியில் மக்களோடு மக்களாக சிறுவர்களுக்கு துப்பாக்கி பட்டாசுகள் வாங்கி கொடுத்தும் அவர்கள் வீட்டில் தீபாவளி பலகாரம் உண்டும் தீபா
அமைச்சர்


புதுக்கோட்டை, 20 அக்டோபர் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள ஜீவாநகர், விளாப்ட்டி மற்றும் இலுப்பூர் கடைவீதி பகுதியில் மக்களோடு மக்களாக சிறுவர்களுக்கு துப்பாக்கி பட்டாசுகள் வாங்கி கொடுத்தும் அவர்கள் வீட்டில் தீபாவளி பலகாரம் உண்டும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடிய முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தினந்தோறும் சைக்கிள் மூலமாக மக்களை சந்திப்பை வழக்கமாகவே கொண்டுள்ளார் அதன்படி இன்றைய தீபாவளி தினமான பண்டிகை நாளில் வழக்கம்போல் சைக்கிள் பயணம் மேற்கொண்ட அவர் இலுப்பூர் கடைவீதி, ஜீவாநகர், விளாப்பட்டி பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து தீபாவளி வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர்.

அப்போது இளைஞர்கள் சிலர் பட்டாசுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் அந்த கோரிக்கையேற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்களுக்கு பட்டாசு, துப்பாக்கி மற்றும் சீனி வெடி பட்டாசு ஆகியவை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டார், பின்னர் ஜீவாநகர் பகுதிக்கு சென்ற அவர் அங்கு உள்ள மக்களை சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது அவர்கள் கொடுத்த முறுக்கு அதிரசம் ஆகியவற்றை சுவைத்து பார்த்தார் பின்பு பலகாரம் சுவையாக இருந்தது என்று அந்த பெண்மணிக்கு சிறப்பு பரிசும் வழங்கினார், பின்னர் சிறுவர்களுக்கு பட்டாசு வாங்க பணம் வழங்கி வாழ்த்து கூறினார்.

Hindusthan Samachar / Durai.J