தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.) புத்தாடை அணிந்து, விதவிதமான பட்டாசுகளை வெடித்து இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகையை சிவகாசி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் மக்கள் படையெடுத்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை


சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)

புத்தாடை அணிந்து, விதவிதமான பட்டாசுகளை வெடித்து இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகையை சிவகாசி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் மக்கள் படையெடுத்து சென்று பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்தன.

ஆண்டுதோறும் புதுப்புது ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பீட்சா, வாட்டர்மெலன் உள்ளிட்ட பல்வேறு வகை பட்டாசுகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில், இந்தாண்டு கூடுதலாக ரூ.1,000 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக டில்லியில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன் காரணமாகவும் பட்டாசு விற்பனை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b