அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேட்டி
டெல் அவிவ், 20 அக்டோபர் (ஹி.ச.) இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பேச்சுவார்த்தை காரணமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் நீண்ட நாட்களாக நீடித்து வந்த போரால் பொதுமக்களிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீதான செல்வாக
அடுத்த ஆண்டு  நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேட்டி


டெல் அவிவ், 20 அக்டோபர் (ஹி.ச.)

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பேச்சுவார்த்தை காரணமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் நீண்ட நாட்களாக நீடித்து வந்த போரால் பொதுமக்களிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீதான செல்வாக்கு சரிந்தது.

மேலும் ஊழல் புகார் மற்றும் போரை நீட்டிக்காமல் அமெரிக்காவிடம் பணிந்து நிறுத்தியதற்காக அவருடைய சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

இதனிடையே பிரதமர் நெதன்யாகு அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு நேரலையில் தோன்றி பேட்டி அளித்தார்.

அப்போது 2026-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

இது குறித்து பத்திரிகையாளர் ‘அடுத்த ஆண்டு (2026) நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?’ என கேட்டனா்.

அப்போது அவர் ‘ஆம் நிச்சயமாக’ என பதில் அளித்தார். மேலும் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என பதில் அளித்தார்.

ஏற்கனவே நாட்டின் நீண்டநாள் பிரதமராக

1996-ம் ஆண்டில் இருந்து

(18 ஆண்டுகள் தொடர்ச்சியாக இல்லாமல்) நெதன்யாகு உள்ள நிலையில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இஸ்ரேலில் புதிய பிரதமருக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM