தீபாவளியை வரவேற்கும் விதமாக இரவு முதலே குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்-கோவையில் களைகட்டிய தீபாவளி பண்டிகை
கோவை, 20 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகையை வரவேற்கும் விதமாக கோவையில் இரவு முதலே கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. ஒளி பண்டிகையாகக் கருதப்படும் தீபாவளி தற்போது அனைத்து மக்களும் ஒன்றாகக் கொண்டாடும் பொதுவான விழாவாக மாறியுள்ளது. இந்நிலையில், தீபாவளி ம
In Coimbatore, children began bursting firecrackers from night itself to welcome Diwali — the festival is being celebrated with great excitement and joy across the city.


In Coimbatore, children began bursting firecrackers from night itself to welcome Diwali — the festival is being celebrated with great excitement and joy across the city.


கோவை, 20 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகையை வரவேற்கும் விதமாக கோவையில் இரவு முதலே கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

ஒளி பண்டிகையாகக் கருதப்படும் தீபாவளி தற்போது அனைத்து மக்களும் ஒன்றாகக் கொண்டாடும் பொதுவான விழாவாக மாறியுள்ளது.

இந்நிலையில், தீபாவளி முதல் நாள் இரவு முதலே கோவையின் பல்வேறு பகுதிகளில் சிறுவர், சிறுமியர் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து தீபாவளியை வரவேற்றனர்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வீட்டின் முன்பு விளக்குகள் ஏற்றி, பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

சிங்காநல்லூர், கணபதி, ராமநாதபுரம், சாய்பாபா காலனி, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதலே பட்டாசு சத்தம் முழங்கியது.வீதியெங்கும் குழந்தைகள் குழுவாக சேர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

கோவையில் தீபாவளி கொண்டாட்டம் தொடர்ந்து உற்சாகத்துடன் நடைபெற்று வருவதால், நகரம் முழுவதும் தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியில் மிதந்தது.

Hindusthan Samachar / V.srini Vasan