இந்தியாவில் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையால் நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பு
புதுடில்லி, 20 அக்டோபர் (ஹி.ச.) மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையால் நாபித்ரோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய அறிவியல் மற்று
இந்தியாவில் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையால் நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பு


புதுடில்லி, 20 அக்டோபர் (ஹி.ச.)

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையால் நாபித்ரோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் மருந்து நிறுவனத்துடன் இணைந்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் பெருமையுடன் குறிப்பிட்டார்.

இது சுவாச தொற்று நோய்களுக்கு எதிராக, குறிப்பாக புற்று நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்த மருந்து இந்தியாவில் முழுமையாக கருத்தியல் செய்யப்பட்டு மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட முதல் மூலக்கூறு என்றும், மருந்து துறையில் தன்னம்பிக்கை நோக்கிய குறிப்பிடத்தக்க வேகத்தை குறிக்கிறது என்றும் கூறினார்.

மருந்து துறையில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று பேசுகையில், மத்திய மந்திரி இதனை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மரபணு துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் அவர் விரிவாக எடுத்துக் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM