Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி , 20 அக்டோபர் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 271.63 கோடி ரூபாய் மதிப்பில் 378 வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் உள்ளிட்ட நகராட்சிகளில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், 15வது நிதிக்குழு மானியம், தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு, துாய்மை பாரதம், பள்ளி மேம்பாட்டு மான்யம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு, நகர்ப்புற சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களின்படி 271 தார் சாலை மற்றும் சிமென்ட் சாலைகள் 3,077.75 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 14 பணிகள் 195.37 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 15வது நிதிக்குழு மான்யம் திட்டத்தின்கீழ் 32 பணிகள் 468.36 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களின் கீழ் 4 நகராட்சி பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் 180 லட்சம் ரூபாய் மதிப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தெரு மின் விளக்குகள், திறந்தவெளி கிணறுகள், பாதாள சாக்கடை, நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், எமப்பேர் குளம், நவீன எரிவாயு தகன மேடை, புதிய புறநகர் பஸ் நிலையம் அமைத்தல், குடிநீர் அபிவிருத்தி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி நகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 378 திட்டப் பணிகள் 27,163.61 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b