Enter your Email Address to subscribe to our newsletters
காஞ்சிபுரம், 20 அக்டோபர் (ஹி.ச.)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் மலை குன்றின் மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு முருகன் கோவில் என்ற சிறப்பை, இக்கோவில் பெற்றுள்ளது.
இங்கு, வரும் 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை, கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, 26ம் தேதி கந்தழீஸ்வரர் கோவிலில் வேல் வாங்கும் விழாவும், 27ம் தேதி சூரசம்ஹாரமும், 28ம் தேதி திருக்கல்யாண உத்சவமும் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில், அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன், அறங்காவலர்கள் சரவணன், குணசேகர், சங்கீதாகார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b