இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி
திருப்பூர், 20 அக்டோபர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த கலைவாணி அவரது மகன்கள் மைத்ரேயன் (22) மற்றும் கரண் (12) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் காங்கேயம் பரஞ்சேரி பகுதியில் வந்துள்ளார். அப்போது எதிர் திசையில் வந்த வடமாநில தொழிலாளி த
accident


திருப்பூர், 20 அக்டோபர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்த கலைவாணி அவரது மகன்கள் மைத்ரேயன் (22) மற்றும் கரண் (12) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் காங்கேயம் பரஞ்சேரி பகுதியில் வந்துள்ளார்.

அப்போது எதிர் திசையில் வந்த வடமாநில தொழிலாளி தாஸ் (35) என்பவரது இரு சக்கரவாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காயமடைந்த இவர்களை சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில்

சகோதரர்கள் மைத்ரேயன் மற்றும் கரன் எதிர் திசையில் வந்த வட மாநில தொழிலாளி தாஸ் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாய் கலைவாணி மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN