Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச)
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தனது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்திகளை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் தெரிவித்ததாவது,
தீபாவளி திருநாளில் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்,அது போல நாம் உள்ளூர் பொருட்களை பயன்படுத்தி தீபாவளி கொண்டாடுங்கள்.
வருகிற தேர்தலில் திமுக என்கிற அரக்கனை வீட்டிற்கு தமிழக மக்கள் அனுப்புவார்கள்.
மக்களுக்கு மிகப்பெரிய வெளிச்சத்தை ஏப்ரல் மாதத்தில் கொடுப்போம்.தற்போது வரை முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்லவில்லை.
திமுக தலைவராக அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு முதலமைச்சராக அவர் அனைவருக்குமானவராக இருக்க வேண்டும்.தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும்.
தமிழக காவல்துறை விஜய்க்கு பாதுகாப்பு கொடுத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். விஜயை தடுப்பதற்கு எந்த உரிமையும் இல்லை.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க விஜய்க்கு உரிமை உள்ளது.அவர் வீட்டில் முடங்கி இருக்கிறார் என்றெல்லாம் நான் பார்க்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டும் என்று காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கிறார் அதை செய்து கொடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை.
வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவன் தனது கட்சியினரை இறங்கி சென்று தடுத்திருக்க வேண்டும்.
இவ்வாறு செய்யாதீர்கள் அது தவறு என்று திருமாவளவன் சொல்லியிருக்க வேண்டும்.
ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதி இதை செய்திருக்க வேண்டும். நான்கு தட்டு தட்டினார்கள் என்று சொல்வதையெல்லாம் எந்த விதத்திலும் நாகரீக அரசியலில் ஏற்றுக் கொள்ள முடியாது.
அவர் அவரது கடமை செய்ய தவறி விட்டார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ