Enter your Email Address to subscribe to our newsletters
மயிலாடுதுறை, 20 அக்டோபர் (ஹி.ச.)
மயிலாடுதுறை அருகே ஆத்தூர் கிராமத்தில் 70 வயது மூதாட்டி சமுத்திரமேரி என்பவர் தனது பேத்தி ஆரோக்கிய மேரி என்பவர் உடன் பழுதடைந்த குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
ஓலை குடிசைகள் கிழிந்து குடியிருக்க முடியாத அளவில் சிதிலமடைந்த நிலையில், இவரது நிலைமை கண்டு மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் சமூக சேவகர் பாரதிமோகன் என்பவருக்கு அப்பகுதி இளைஞர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நண்பர்கள் உதவியுடன், அறக்கட்டளை மூலம் சமுத்திரமேரிக்கு இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான சிமெண்ட் ஸ்லாப் வீடு கட்டி, வழங்கினார். இதன் புதுமனை புகுவிழா இன்று நடைபெற்றது. தீபாவளியை முன்னிட்டு ஏழைக்கு பரிசாக இந்த வீடு இன்று வழங்கப்பட்டது.
இதனை முன்னிட்டு நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் பாரதி மோகன் மற்றும் அவரது நண்பர்கள், பயனாளி சமுத்திர மேரி ஆகியோர் தேசியக்கொடி ஏந்தி திறப்பு விழா செய்தனர். மூதாட்டி சமுத்திரமேரி கையால் ரிப்பன் வெட்டி புதுமனை புகு விழா நடைபெற்றது தொடர்ந்து பால் காய்ச்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மூதாட்டி அனைவருக்கும் திருநீறு பூசி ஆசி வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதிமோகன்,
இந்த குடும்பத்திற்கு தேவையான ஆறு மாதம் மளிகை பொருட்கள் ஏற்கனவே வழங்கி வருவதாகவும் இதுவரை 15 பேருக்கு வீடு கட்டி கொடுத்துள்ளதாகவும், பிறருக்காக வாழும் வாழ்க்கையை வாழ்க்கையாகும் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN