Enter your Email Address to subscribe to our newsletters
பனாஜி, 20 அக்டோபர் (ஹி.ச.)
பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையான இன்று
(அக் 20) கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில், கடற்படை வீரர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது எனது பாக்கியம். எனது ஒருபுறம் கடலும், மறுபுறம் இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் பலமும் உள்ளது.
இந்திய கடற்படையின் துணிச்சலான வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது தனது அதிர்ஷ்டம். இந்த தருணம் மறக்கமுடியாதது. இந்த காட்சி நம்பமுடியாதது.
இந்தியா மீதான நமது வீரர்களின் நேசம் தான், நமது கப்பல்கள் விமானங்களின் பலம். கடல் நீரில் சூரியனின் கதிர்களின் பிரகாசம், துணிச்சலான வீரர்களால் ஏற்றி வைக்கப்படும் தீபாவளி விளக்குகளைப் போன்றது.
ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிக்காக இந்திய பாதுகாப்பு படை வீரர்களை பாராட்டுகிறேன். கடற்படை, விமானப்படை கூட்டு முயற்சி தான் பாகிஸ்தானை விரைவாக சரணடையச் செய்தது. ஐஎன்எஸ் விக்ராந்தில் நேற்று கழித்த இரவை வார்த்தைகளில் விவரிக்க கடினமாக உள்ளது. நீங்கள் அனைவரும் எவ்வளவு அபரிமிதமான ஆற்றலையும் உற்சாகத்தையும் நிரப்பியிருந்தீர்கள் என்பதை நான் கண்டேன்.
நேற்று நீங்கள் தேசபக்தி பாடல்களைப் பாடுவதையும், உங்கள் பாடல்களில் ஆப்பரேஷன் சிந்தூரை விவரித்த விதத்தையும் பார்த்தபோது, ஒரு ஜவான் போர்க்களத்தில் நிற்கும்போது உணரும் அனுபவத்தை எந்த வார்த்தைகளாலும் முழுமையாக வெளிப்படுத்த முடியாது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b