பெண் ஊழியர் உயிரிழப்பு - துக்கம் அனுசரிக்கும் விதமாக பாலருவி நீர்வீழ்ச்சி மூடல்
தென்காசி, 20 அக்டோபர் (ஹி.ச.) தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் உள்ள பாலருவி நீர்வீழ்ச்சியானது இன்று ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதாவது, பாலருவி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு ஆலோசனை மற்
Palaruvi Water Falls


தென்காசி, 20 அக்டோபர் (ஹி.ச.)

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் உள்ள பாலருவி நீர்வீழ்ச்சியானது இன்று ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

அதாவது, பாலருவி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு ஆலோசனை மற்றும் பாதுகாப்பு வழங்கி வந்த சைலஜா என்ற ஊழியர் ஒருவர் உடல் நலப் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அவரது இழப்பிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று ஒரு நாள் பாலருவி நீர்வீழ்ச்சியானது மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் யாரும் பாலருவி நீர்வீழ்ச்சிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரு நாள் மட்டும் பாலருவி நீர்வீழ்ச்சி மூடப்படும் எனவும், நாளை முதல் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN