ஜனாதிபதி திரவுபதி முர்மு தீபாவளி வாழ்த்து
புதுடெல்லி, 20 அக்டோபர் (ஹி.ச.) இந்தியா முழுவதும் இன்று (அக் 20) தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். புத்தாடை அணிந்தும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் நாட்டு ம
ஜனாதிபதி திரவுபதி முர்மு தீபாவளி வாழ்த்து


புதுடெல்லி, 20 அக்டோபர் (ஹி.ச.)

இந்தியா முழுவதும் இன்று (அக் 20) தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

புத்தாடை அணிந்தும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவில் தீபாவளி ஒரு பெரிய மற்றும் பிரபலமான பண்டிகை. இது இருளின் மீது ஒளியின் வெற்றியையும், அறியாமையின் மீது அறிவு வெற்றி பெற்றதையும், அநீதியின் மீதான நீதியின் வெற்றியையும் குறிக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை வெளிப்படுத்துகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் கொண்டு, இந்த பண்டிகையை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.

இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவர வாழ்த்துகிறேன்.

இவ்வாறு திரவுபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b