Enter your Email Address to subscribe to our newsletters
ராமநாதபுரம், 20 அக்டோபர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடகடல் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளுக்கு இன்று மீன்பிடிக்கச் செல்ல அனுமதி சீட்டு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி உருவாகி இருப்பதால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக மண்டபம் மீன்வளத் துறை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி நாட்டுப் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN