Enter your Email Address to subscribe to our newsletters
ஐதராபாத், 20 அக்டோபர் (ஹி.ச.)
நாட்டை வழி நடத்துவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்-மந்திரி கூறியுள்ளார்.
நாட்டில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 21 ஆக குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
‘21 வயது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் வெற்றிகரமாக பணியாற்றும்போது, 21 வயது எம்.எல்.ஏ.வால் சிறப்பாக செயல்பட முடியாதா?’
என கேள்வி எழுப்பினார்.
எனவே சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 21-ஆக குறைக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி தெலுங்கானா சட்டசபையில் வருகிற நாட்களில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டை வழி நடத்துவதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு அளிக்க வேண்டும் எனவும், இது நாட்டின் தற்போதைய தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM