தீபாவளி பண்டிகை முன்னிட்டு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்
கரூர், 20 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர்வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ர
Temple


கரூர், 20 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர்வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மூலவர் கணபதிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது .

தொடர்ந்து உதிரிப்பூக்களால் ஆலயத்தில் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Hindusthan Samachar / Durai.J