Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 20 அக்டோபர் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் இன்று (அக் 20) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையிலும் தீபாவளி பண்டிகை பட்டாசு வெடி சத்தத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டு தனது குடும்பத்துடன் கடை உரிமையாளர்கள் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் மதுரையில் பழைய இரும்பு கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை விளாங்குடி ராமமூர்த்தி நகர் பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், இன்று திடீரெனன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்த தீ, மளமளவென பரவி கடை முழுவதும் பரவி கரும்புகை வானை முட்டும் அளவிற்கு எழுந்துள்ளது.
இதனால், அருகில் உள்ள பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வருவதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / vidya.b