Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
தீபாவளி பண்டிகை இன்று (அக் 20) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை சுபதினத்தில், தமிழ்நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது. இந்நாளில் அன்னை லக்ஷ்மி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, நமது வாழ்க்கையை அன்பு மற்றும் கருணை குணத்தால் நிரப்பி, அமைதி மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய ஒரு இணக்கமான சமூகத்தை நாம் வளர்க்க அருள்புரியட்டும்!
அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார் .
Hindusthan Samachar / vidya.b