தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 369 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவு
தென்காசி, 20 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 5 தினங்களாக கன மழையானது கொட்டித் தீர்த்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் தண்ணீர் வரத்து அதிகர
rain


தென்காசி, 20 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 5 தினங்களாக கன மழையானது கொட்டித் தீர்த்து வரும் நிலையில், இந்த மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளின் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நேற்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசி நகரப் பகுதியில் 63 மில்லிமீட்டர் மழைப்பொழியும், ஆய்க்குடி சுற்றுவட்டார பகுதி, ராமநதி அணைப்பகுதி, சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் தலா 54 மில்லிமீட்டர் மழைப்பொழியும், சிவகிரி சுற்றுவட்டார பகுதியில் 44 மில்லிமீட்டர் மழைப்பொழிவும், கருப்பாநதி அணைப்பகுதியில் 35 மில்லி மீட்டர் மழைப்பொழிவும் என ஒட்டுமொத்தமாக 369 மில்லி மீட்டர் மழைப்பொழிவு தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணைக்கு 303 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டமானது தற்போது 54.30 கனஅடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல், ராமநதி அணைக்கு 169 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் தற்போது 62.56 கன அடியாகவும், கருப்பாநதி அணைக்கு 50 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் தற்போது 57.75 கனஅடியாகவும், குண்டாறு அணைக்கு 141 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையானது முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், அடவிநயினார் அணை பகுதிக்கு 73 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டமானது தற்போது 110.50 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN