Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 20 அக்டோபர் (ஹி.ச.)
சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், சாட்சியங்கள் போன்றவற்றுக்கு சான்றளித்து அவற்றுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் நோட்டரி வழக்கறிஞர்களின் எண்ணிக்கையை தமிழகம், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மத்திய அரசு அதிகரித்துள்ளது.
நோட்டரிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 2,500-ல் இருந்து 3,500 ஆகவும், குஜராத்தில் 2,900-ல் இருந்து 6,000 ஆகவும், ராஜஸ்தானில் 2,000-ல் இருந்து 3,000 ஆகவும், நாகாலாந்தில் 200-ல் இருந்து 400 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை வளர்ச்சி, மாவட்டங்கள், வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை, நோட்டரி சேவைகளுக்கான தேவை ஆகியவற்றை அங்கீகரித்து, அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b