Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 20 அக்டோபர் (ஹி.ச.)
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் திருச்செந்தூர் கடலில் புனித நீராடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொதுவாக அமாவாசை, பவுர்ணமி மற்றும் அதற்கு முந்தைய, பிந்தைய நாட்கள், அஷ்டமி, நவமி போன்ற கனத்த நாட்களில் திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கும். இந்த நேரங்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி உள்வாங்கி காணப்படும்.
அதன்படி நேற்று சுமார் 70 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இந்நிலையில் இன்று
(அக் 20) அமாவாசை என்பதால் 2-வது நாளாக திருச்செந்தூர் கோவில் பகுதியில் சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலில் இருந்த பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
இருப்பினும் இது வழக்கமான சூழல் என்பதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b