திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்
தென்காசி, 20 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், பண்பொழி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவானது கொடியேற்றத்துடன் இன்று வெகு விமர்சையாக தொடங்கியது. இந்த கொடியேற்ற நிகழ்வினை முன்னிட்டு திரு
Tirumalai Kumaraswamy Temple


தென்காசி, 20 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், பண்பொழி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவானது கொடியேற்றத்துடன் இன்று வெகு விமர்சையாக தொடங்கியது.

இந்த கொடியேற்ற நிகழ்வினை முன்னிட்டு திருமலைக் குமாரசுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்த நிலையில், 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த கந்தசஷ்டி திருவிழாவின்போது, நாள்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் முருகப்பெருமான் காட்சியளிக்க உள்ள நிலையில், சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

மேலும், இந்த விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வானது வருகின்ற 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மறுநாள் திருத்தேரோட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN