Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 20 அக்டோபர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட சோலையார் கல்லார் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் சாலை ஓரமாகவே நின்று கொண்டு இருப்பதால் அவ் வழியே செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடனும் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் வால்பாறை பகுதியில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக நிற்பதால் இரவு நேரங்களில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் யானைக்கு நேராக சென்று விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே தீபாவளி என்பதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் வந்து செல்வதால் மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்கி செல்ல வேண்டும்.
வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகர் அறிவுறுத்தலின்படி,
வனவர் முத்து மாணிக்கம் தலைமையில் வன மோதல் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களுடன் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் விடுத்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN