Enter your Email Address to subscribe to our newsletters
புதுடில்லி, 20 அக்டோபர் (ஹி.ச.)
நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். “மை கவர்ன்மென்ட்” என்னும் அரசு இணைய தளத்தில் பதிவு செய்திருந்த பயனர்களுக்கு இ-மெயில் மூலமாக அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இதில் அவர், நாட்டு மக்களே, மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டி எழுப்பிய பிறகு வரும் 2-வது தீபாவளி. ராமர் அநீதியை எதிர்த்து போராடும் பலத்தை தருகிறார். ஆபரேஷன் சிந்தூர் இதற்கு தலை சிறந்த உதாரணம்.
நாடு முழுவதும் ஒளி தீபங்கள் மலர செய்து உணர்வு எனும் விளக்குகளை ஏற்றுவோம்” என அவர் பெயரில் வெளியான வாழ்த்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம் உள்பட 18 மொழிகளில் மொழி பெயர்க்கும் வசதியுடன் இந்த வாழ்த்து செய்தி அனுப்பப்பட்டிருந்தது.
மேலும் எக்ஸ் சமூக வலைத்தளத்திலும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM