Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று (அக் 21) பொதுமக்கள் உற்சாகத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்தனர்.
தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளிலும் தீபாவளி தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பட்டாசுகளால் 43 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தற்போது தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மட்டும் 15 தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும். பட்டாசுகளால் வழக்கமாக ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை, பலத்த மழையால் இந்தாண்டு குறைந்துள்ளது எனவும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு வழக்கத்தை விட 61% அழைப்புகள் கூடுதலாக வந்ததாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி தினமான நேற்று மாலை 6 மணி வரை மட்டும் 4,635 அழைப்புகள் வந்ததாகவும், அதில் தீக்காயங்களுக்காக 135 அழைப்புகள் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b