Enter your Email Address to subscribe to our newsletters
கோவை, 21 அக்டோபர் (ஹி.ச.)
கோவை, பேரூர், தொண்டாமுத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அந்த பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள விலை நிலங்களில் பயன்படுத்தும் தண்ணீருக்காக தோட்டங்களில் அதிக அளவில் கிணறுகள் உள்ளன.
இந்நிலையில் பேரூர் அருகே உள்ள மாதம்பட்டி பகுதியில் உள்ள புவனேஸ்வரி என்பவரின் தோட்டத்தில் இருந்த சுமார் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறுதலாக நாய் ஒன்று விழுந்து உயிருக்கு போராடி வந்தது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு சென்ற தீயணைப்பு துறை உயிருக்கு போராடி வந்த அந்த நாயை கிணற்றில் குதித்த தீயணைப்பு வீரர் அதனை கயிற்றில் கட்டி மீட்டனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்கு உள்ளாகி உயிர் சேதமும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள தடுப்பு சுவர் மற்றும் பராமரிப்பு இல்லாத கிணறுகளை மூட அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில் 100 அடி ஆழக் கிணற்றில் தவறுதலாக நாய் ஒன்று விழுந்து உயிருக்கு போராடி தீயணைப்பு துறையினர் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பேசும் பொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan