தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் செண்டர் மீடியனில் மோதி தலைகுப்புர கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகயம் - இளைஞர் ஒருவர் பலி
கரூர், 21 அக்டோபர் (ஹி.ச.) கரூர் மாவட்டம் சுக்காலியூரை அடுத்த கருப்பம்பாளையம் கிராமத்தை சார்ந்தவர் சிவராஜன் (வயது 21). இவர் தனது நண்பர்களான வஞ்சியம்மன் கோவில் தெருவை சார்ந்த நெடுங்கநாதன் (வயது 21), கருப்பம்பாளையத்தை சார்ந்த நிதிஷ் கண்ணன் (வய
விபத்து


கரூர், 21 அக்டோபர் (ஹி.ச.)

கரூர் மாவட்டம் சுக்காலியூரை அடுத்த கருப்பம்பாளையம் கிராமத்தை சார்ந்தவர் சிவராஜன் (வயது 21).

இவர் தனது நண்பர்களான வஞ்சியம்மன் கோவில் தெருவை சார்ந்த நெடுங்கநாதன் (வயது 21), கருப்பம்பாளையத்தை சார்ந்த நிதிஷ் கண்ணன் (வயது 23), தனுஷ் (வயது 21) ஆகியோருடன் இன்று காலை நாமக்கல் மாவட்டம் வேலூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மலையம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த கார் நிலை தடுமாறி செண்டர் மீடியனில் மோதி எதிர் திசையில் சாலையோரத்தில் தலை குப்புர கவிழ்ந்து விபத்துள்ளானது.

இதில் காயமடைந்த 4 பேரையும் அப்பகுதி பொதுமக்களும், ரோந்து போலீசாரும் மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சிவராமன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்த நிலையில், மற்ற 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / Durai.J