காவலர்களின் தீரத்தையும், தியாகத்தையும் போற்றி வீரவணக்கம் செலுத்துவோம் -அண்ணாமலை
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) உயிர் தியாகம் செய்த எண்ணற்ற காவலர்களை போற்றுவோம் என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, நமது நாடு முழுவதும் கடமை தவற
Annamalai


Tweet


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

உயிர் தியாகம் செய்த எண்ணற்ற காவலர்களை போற்றுவோம் என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

நமது நாடு முழுவதும் கடமை தவறாது பணியாற்றி உயிர் தியாகம் செய்த எண்ணற்ற காவலர்களை போற்றும் காவலர் வீரவணக்க நாள் இன்று.

நாட்டின் சட்டத்தை அரணாக கொண்டு, தியாகம், கடமை, கட்டுப்பாடு ஆகிய மூன்றிலும் உறுதியோடு நின்று, தேச நலனிற்காக தங்கள் உயிரையே அர்ப்பணித்த காவலர்களின் தீரத்தையும், தியாகத்தையும் போற்றி வீரவணக்கம் செலுத்துவோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ