Enter your Email Address to subscribe to our newsletters
கள்ளக்குறிச்சி, 21 அக்டோபர் (ஹி.ச.)
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் ஆவணங்களை சிபிஐயிடம் வழங்க வலியுறுத்தியும் ஆவணங்களை வழங்காமல் அலட்சியம் காட்டி வரும் தமிழக அரசையும் மற்றும் காவல்துறையை கண்டித்து
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட செயலாளர் கெவின் சரண் டேனியல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கொலை வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் வழங்க வலியுறுத்தியும் ஒப்படைக்காமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசையும் காவல்துறையும் கண்டித்து கொட்டும் மழையில் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில செயலாளர் ஜீவன் ராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கண்டன உரை நிகழ்த்தினார்.
Hindusthan Samachar / ANANDHAN