கோவை விமான நிலையம் மற்றும் பந்தய சாலை பகுதிகளுக்கு இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் - வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை
கோவை, 21 அக்டோபர் (ஹி.ச.) கோவை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பந்தய சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். கோவை விமான நிலைய அதிகாரிகளின் மின்னஞ்சல்களுக்கு விமான நிலையம் மற்றும் பந்தய சால
Bomb Threat Email Targets Coimbatore Airport and Race Course; Bomb Squad Conducts Intensive Search


கோவை, 21 அக்டோபர் (ஹி.ச.)

கோவை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பந்தய சாலை பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

கோவை விமான நிலைய அதிகாரிகளின் மின்னஞ்சல்களுக்கு விமான நிலையம் மற்றும் பந்தய சாலை பகுதிகளுக்கு மிரட்டல் வந்தது.

தகவலையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விமான நிலையம் மற்றும் பந்தய சாலை பகுதிகளில் மோப்பநாய் உடன் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைகளின் போது எந்த சந்தேகப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் தொடர்பாகவும், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / V.srini Vasan