ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று (அக் 21) வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் இன்று (அக் 21) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ஜம்மு காஷ
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று (அக் 21) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று (அக் 21) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

காஷ்மீரின் உரிமைகள் மற்றும் சுயாட்சி அரிப்புக்கு எதிராகப் போராடி, அதன் குரலின் அடையாளமாக அவர் நிற்கிறார்.

அவருக்கு மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b