நேற்று ஒரே நாளில் 7463 அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு வந்துள்ளது
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) நேற்று ஒரே நாளில் 7463 அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு வந்துள்ளது, இயல்பை விட 48 சதவீதம் கூடுதலான அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கு வந்துள்ளது. அழைப்புகள் அடிப்படையில் அனைத்து அழைப்புகளுக்கும் ஆம்புல
Ambulance


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

நேற்று ஒரே நாளில் 7463 அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு வந்துள்ளது, இயல்பை விட 48 சதவீதம் கூடுதலான அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்கு வந்துள்ளது.

அழைப்புகள் அடிப்படையில் அனைத்து அழைப்புகளுக்கும் ஆம்புலன்ஸ் சென்று பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தீபாவளியின் போது 100% வாகன வசதியை அடைவதற்காக அனைத்து ஆம்புலன்ஸ்களின் திட்டமிடப்பட்ட இடங்களில் சேவைகள் கிடைக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டது. அடையாளம் காணப்பட்ட அதான சாலைகள் பாதிப்பு மிகுந்த பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டது.

108', '104' மற்றும் '102' க்கான அவசரகால மையங்களில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் மூன்று ஷிப்ட்களில் தொடர்ந்து பணியாளர்கள் வேலை செய்தனர்.

நேற்று ஒரே நாளில் 7,463 அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ்க்கு வந்துள்ளது அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வழக்கமாக நாளொன்றுக்கு 500 என்ற அளவில் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்புகள் வரும் இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 7,463 அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்துக்கு வந்துள்ளது. இயல்பிலிருந்து 48% கூடுதலான அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கு தீபாவளி பண்டிகைக்காக வந்துள்ளதாக 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அழைப்புகள் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஒரே நாளில் தீக்காயங்களால் மட்டும் 261 பேர் பாதிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ