Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச)
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பட்டாசு வெடிவிபத்தில் தமிழகம் முழுவதும் 43இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், பட்டாசு வெடிவிபத்தில்200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைநேற்று கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளையும் வெடித்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பரவலாக மழை பெய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீ விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோன்று, பல்வேறு மருத்துவமனைகளிலும் தீபாவளி தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்தது உள்ளிட்டவற்றால், தமிழகம் முழுவதும் 43 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. இவற்றில் சென்னையில் மட்டுமே 15 இடங்களில் லேசான தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
பட்டாசு வெடித்ததினால் தமிழ்நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.அந்த வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேர் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
இதில், ஒரு குழந்தைக்கு மட்டும் 7 சதவீதம் அளவிற்கு தீக்காய பாதிப்பும், ஒரு குழந்தைக்கு 15 சதவீதம் தீக்காய பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. 20 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 6 பேர் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
24 பேர் வீடு திரும்பினர்.சென்னையில் மட்டும் 65 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / P YUVARAJ