Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)
காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21–ந்தேதி காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, அனைத்து காவலர்களுக்கும், இன்றைய நாளில் வீர வணக்கம் செலுத்தும் விதமாக சென்னையில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் , பணியில் மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டு காசோலை மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதே போல் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி மறைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.
Hindusthan Samachar / vidya.b