குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்கள் உடை மாற்றும் அறை
தென்காசி, 21 அக்டோபர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக குற்றால அருவிகள் நேற்று முன்தினம் காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது. குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின
Courtallam Falls


தென்காசி, 21 அக்டோபர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக குற்றால அருவிகள் நேற்று முன்தினம் காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது.

குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் போது, குற்றாலம் மெயின் அருவி பகுதியில் உள்ள தடுப்புகள் முழுவதுமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள தடுப்புகள் முழுமையாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பெண்களுக்கு என தற்காலிகமாக கட்டப்பட்ட உடைமாற்று அறை, தரை தளங்கள் உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

மேலும், அடித்து செல்லப்பட்ட தகரங்கள் மற்றும் இரும்பு கம்பிகள் உள்ளிட்டவைகள் ஆங்காங்கே ஆற்றுப்படுகைகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் வழித்தடங்களில் கிடைக்கின்றன.

அதேபோல், போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்புக்காக வைத்திருந்த பேரிக்கார்டுகள் முழுவதும் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது குற்றாலம் மெயின் அருவியானது உருக்குலைந்து காட்சி அளித்து வருகிறது.

மேலும், சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டுமென்றால் பராமரிப்பு பணிகளை உடனடியாக செய்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்க முடியும் என்பதால் பெண்கள் குளிக்கும் பகுதியில் சிதலடைந்து காணப்படும் பகுதியை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN