தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் இன்று (அக் 21) 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு அரபிக்கடலில், கேரள கடலோர பகுதிக
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் இன்று

(அக் 21) 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தென்கிழக்கு அரபிக்கடலில், கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த, 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும்.

இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த, 2 நாட்களில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் வடகிழக்கு பருவமழை, தமிழக வட கடலோர மாவட்டங்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 26 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமாரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் நாளை மிக கன மழையும், கடலுார், கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், வேலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b