பெரியார் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
கள்ளக்குறிச்சி, 21 அக்டோபர் (ஹி.ச) கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Periyar Aruvi


கள்ளக்குறிச்சி, 21 அக்டோபர் (ஹி.ச)

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கல்வராயன் மலையில் உள்ள பெரியார் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்தது. நேற்றைய தினம் மாவட்டத்தில் போதிய அளவுக்கு மழை இல்லை.

இருப்பினும் இன்று காலை முதலே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதில் குறிப்பாக, கல்வராயன் மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, குண்டியாநத்தம் பகுதியில் உள்ள பெரியார் அருவியில் தண்ணீர் வரலாறு காணாத அளவிற்கு ஆர்ப்பரித்து செல்கிறது.

சுற்றுலாப் பயணிகளும், அப்பகுதி மக்களும் கொட்டும் மழை என்றும் பாராமல் அருவியில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பார்த்து ரசித்து செல்லுகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN