Enter your Email Address to subscribe to our newsletters
மயிலாடுதுறை, 21 அக்டோபர் (ஹி.ச)
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக பலத்த மழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது.
இதனிடையே மழை காரணமாக நகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பிரதான சாலையில் முரளி மற்றும் கண்ணன் இருவரின் வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் முரளியின் மனைவி வள்ளி மற்றும் மற்றொரு வீட்டில் வசித்து வந்த கண்ணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தொடர்ந்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் வீட்டில் தங்கி இருந்தவர்களைi பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தினர்.
காயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தற்போது தண்ணீர் சூழத் துவங்கியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN