Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 21 அக்டோபர் (ஹி.ச.)
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மில்லர்புரம் பால்பாண்டி நகர் நிகிலேஷன் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இப்பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வெள்ள நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர் நிகிலேஷன் நகர்,
ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகள், மற்றும் ராஜீவ் நகர் அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளை பாரவையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னா் மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ரியங்கா ஆகியோா் 4ம் கேட் பகுதியில் நடைபெற்று வரும் வௌ்ளநீா் வௌியேற்றும் பணியையும் சங்கரபோி ஜிபி காலணி பகுதியில் வெள்ளநீா் வௌியேற்றும் பணியை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர் அகமது, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகா், ராஜபாண்டி, மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலா்கள் சந்திரபோஸ், ஜான், முன்னாள் கவுன்சிலா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், வட்டப்பிரதிநிதி வேல்முருகன், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், உள்ளிட்ட அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
Hindusthan Samachar / vidya.b