கனமழை காரணமாக இருளில் மூழ்கிய பாம்பன் பாலம்
ராமநாதபுரம், 21 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநி
கனமழை  காரணமாக இருளில் மூழ்கிய பாம்பன் பாலம்


ராமநாதபுரம், 21 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று (அக் 20) அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது. இதனால் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்மழையின் காரணமாக பாம்பன் பாலம் முழுவதும் இருளில் மூழ்கி காட்சியளித்தது. வானம் மிகவும் மேகமூட்டத்துன் காணப்பட்டது.

இதன் காரணமாக போதிய வெளிச்சம் இல்லாமல் பகல் நேரத்திலும் பாம்பன் பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.

Hindusthan Samachar / vidya.b