லேப்டாப் பேட்டரி ஆயுளை கணிசமாக அதிகரிக்கும் சில நடைமுறைகள்
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக லேப்டாப் மாறிவிட்டன. வேலை, படிப்பு, திரைப்படம் பார்ப்பது, கேமிங் எனப் பல நோக்கங்களுக்கு இன்று லேப்டாப் தேவையாக இருக்கிறது. ஆனால் லேப்டாப் பயனர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை, அத
லேப்டாப் பேட்டரி ஆயுளை கணிசமாக அதிகரிக்கும் சில நடைமுறைகள்


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக லேப்டாப் மாறிவிட்டன. வேலை, படிப்பு, திரைப்படம் பார்ப்பது, கேமிங் எனப் பல நோக்கங்களுக்கு இன்று லேப்டாப் தேவையாக இருக்கிறது.

ஆனால் லேப்டாப் பயனர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினை, அதன் விரைவான பேட்டரி தேய்மானம் அல்லது போதுமான பேக்கப் பவர் இல்லாதது.

லேப்டாப் நிறுவனத்தின் தரமே இதற்குக் காரணம் என்று பலர் நினைத்தாலும், பேட்டரியின் நீண்ட ஆயுள் பெரும்பாலும் நாம் எவ்வாறு லேப்டாப்பை பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

சில நடைமுறைகளைப் பின்பற்றுவது பேட்டரி ஆயுளை கணிசமாக அதிகரிக்கும். இதைப் பின்பற்றினால் லேப்டாப்பை தொடர்ந்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி நீண்ட நேரம் இயக்க முடியும்.

லேப்டாப்பின் பேட்டரி ஆயுளை நீட்டிக்க சில பயனுள்ள வழிகள் :

அதிகமாக சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்.

லேப்டாப்பை எப்போதும் சார்ஜ் செய்வது பேட்டரிக்கு தீங்கு விளைவிக்கும். பேட்டரி 20% க்கும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் 80-90% சார்ஜிங் ஏறியதும் சார்ஜரைத் துண்டிக்கவும்.

ஒரிஜினல் சார்ஜர்களைப் பயன்படுத்தவும்.

லேப்டாப் பேட்டரியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, எப்போதும் லேப்டாப் உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட சார்ஜரைப் பயன்படுத்தவும். சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் சார்ஜர்கள் தவறான மின்னழுத்தத்தை வழங்கக்கூடும்.

இதனால் பேட்டரி சேதமடையக்கூடும்.

வெப்பத்திலிருந்து பாதுகாத்தல்

அதிகமான வெப்பம் லேப்டாப் பேட்டரியின் ஆயுளைப் பாதிக்கிறது. சரியான காற்றோட்டத்தை உறுதி செய்ய லேப்டாப்பை தட்டையான, கடினமான மேற்பரப்பில் பயன்படுத்தவும். படுக்கைகள் அல்லது போர்வைகள் போன்ற மென்மையான பரப்புகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை வெப்பத்தை தக்க வைக்கும்.

பவர் செட்டிங்ஸ்களைப் பயன்படுத்தவும்.

பேட்டரி சுமையைக் குறைக்கவும் பேக்கப் பவர் நேரத்தை நீட்டிக்கவும் லேப்டாப்பில் பவர் சேவர் பயன்முறை அல்லது பேட்டரி சேவர் பயன்முறையைச் செயல்படுத்தவும்.

பின்னணியில் இயங்கும் செயலிகளை மூடுங்கள்.

பின்னணியில் இயங்கும் தேவையற்ற செயலிகள் மற்றும் மென்பொருள் பேட்டரியை விரைவாக காலியாக்கும். பேட்டரி செயல்திறனை மேம்படுத்த டாஸ்க் மேனேஜர் மூலம் இவற்றை மூடவும்.

திரை பிரகாசத்தைக் குறைத்தல்.

அதிக திரை பிரகாசம் பேட்டரி வெளியேற்றத்தை துரிதப்படுத்துகிறது. உங்களுக்கு தேவையான குறைந்தபட்ச நிலைக்கு பிரகாசத்தை சரிசெய்து வைத்துக்கொள்ளவும்.

வைஃபை மற்றும் புளூடூத்தை அணைக்கவும்.

பயன்பாட்டில் இல்லாதபோது வைஃபை மற்றும் புளூடூத்தை அணைத்து வைக்கவும். ஏனெனில் அவை தொடர்ந்து பேட்டரி சக்தியைப் பயன்படுத்துகின்றன.

சார்ஜ் முழுதும் காலியாவதை தவிர்க்கவும்.

பேட்டரியை அடிக்கடி 0% க்கு டிஸ்சார்ஜ் செய்வது அதன் ஆயுளைக் குறைக்கிறது. பேட்டரி 20-30% எட்டும்போது அதை ரீசார்ஜ் செய்ய முயற்சிக்கவும்.

பேட்டரி அளவீடு:

சில மாதங்களுக்கு ஒருமுறை, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து, பின்னர் அதை முழுமையாக டிஸ்சார்ஜ் செய்யவும்.

இது பேட்டரி சென்சார் துல்லியமான தரவைக் காட்டவும், பேட்டரி ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.

மென்பொருள் மற்றும் இயக்கிகளைப் அப்டேட் நிலையில் வைத்திருங்கள்:

பேட்டரி பயன்பாட்டை திறம்பட மேம்படுத்த லேப்டாப்பின் ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் டிரைவ்களை அடிக்கடி அப்டேட் செய்யவும்.

Hindusthan Samachar / JANAKI RAM