Enter your Email Address to subscribe to our newsletters
ராமநாதபுரம், 21 அக்டோபர் (ஹி.ச.)
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருகிறது இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தை மழைநீர் வெள்ளமென சூழ்ந்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மார்ச்சுவரி பகுதி, அம்மா உணவகம் பகுதி, குழந்தைகள் வார்டு பகுதி உட்பட பல பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது .
மழை நீரை வெளியேற்றும் பணி ஒருபுறம் நடந்து வந்தாலும் வெளியேற்றும் அளவைவிட அதிக அளவு மழை நீர் சேர்வதால் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் மருத்துவர்கள் உட்பட அனைவரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN