Enter your Email Address to subscribe to our newsletters
தூத்துக்குடி, 21 அக்டோபர் (ஹி.ச.)
முதல்வர் ஸ்டாலின் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு இன்று (21.10.2025) காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து காவல்துறையில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப்பணி அலுவலர் வாரிசுதார்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான தகவல் பதிவு உதவியாளர்/ வரவேற்பாளர் மற்றும் அலுவலக உதவியாளருக்கான பணியானைகளை வழங்கிடும் அடையாளமாக 20 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இந்த காணொளி அனைத்து மாவட்ட மாவட்ட காவல் அலுவலகத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள், அமைச்சுப்பணி நிர்வாக அலுவலர்கள் மற்றும் பணி ஆணையை பெற்றுக் கொள்ளும் வாரிசுதார்கள் அவர்களது குடும்பத்தார்கள் ஆகியோருடன் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணி அலுவலர் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான தகவல் பதிவு உதவியாளர்/ வரவேற்ப்பாளர் (Data Entry Assistant/Receptionist) மற்றும் அலுவலக உதவியாளருக்கான பணி ஆணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வழங்கி பணி சிறக்க வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணிய பெருமாள், அலுவலக கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b