Enter your Email Address to subscribe to our newsletters
லாகூர், 21 அக்டோபர் (ஹி.ச.)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் (50 ஓவர்) போட்டிகளுக்கான புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி நியமிக்கபட்டுள்ளார்.
முகமது ரிஸ்வானிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஷாகீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரிஸ்வானை மாற்றி அப்ரிடியை கேப்டனாக நியமிக்கும் முடிவு, பாகிஸ்தான் அணியின் வெள்ளை பந்து (ஒரு நாள் மற்றும் டி20) தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், உயர் செயல்திறன் இயக்குனர் அகிப் ஜாவேத் மற்றும் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஷாகீன் அப்ரிடியின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது.
இவர் ஏற்கனவே பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM