அக்டோபர் 22 - 29 தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரயில்கள் முன்பதிவு குறைவாக இருப்பதால் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
பாட்னா, 21 அக்டோபர் (ஹி.ச.) தீபாவளியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்லவும், பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் பணிபுரியும் நகரங்களுக்குத் திரும்பவும் வசதியாக, தெற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் மொத்தம் 60 சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது. மேலும்
அக்டோபர் 22 - 29 தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரயில்கள் முன்பதிவு குறைவாக இருப்பதால் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு


பாட்னா, 21 அக்டோபர் (ஹி.ச.)

தீபாவளியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்லவும், பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் பணிபுரியும் நகரங்களுக்குத் திரும்பவும் வசதியாக, தெற்கு ரயில்வே பல்வேறு வழித்தடங்களில் மொத்தம் 60 சிறப்பு ரயில்களை அறிவித்திருந்தது.

மேலும், தமிழக அரசு தீபாவளி மறுநாளான அக்டோபர் 21ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், தீபாவளிக்குப் பிறகு இயக்கப்படவிருந்த 6 சிறப்பு ரயில்கள், முன்பதிவு குறைவால், இந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் பின்வருமாறு:

நாளை அக்டோபர் 22-ம் தேதி மதியம் 3.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டு கோட்டயம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரெயில் (06121) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போல, அக்டோபர் 23-ம் தேதி மதியம் 2.05 மணிக்கு கோட்டயத்தில் இருந்து சென்னை சென்டிரல் வரை இயக்கப்படவிருந்த சிறப்பு ரெயில் (06122) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு - திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரெயில் (06153) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போல, அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படவிருந்த சிறப்பு ரெயில் (06154) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 28-ம் தேதி காலை 9.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில் (06054) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 29-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து நாகர்கோவில் வரை செல்வதாக அறவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரெயில் (06053) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்பதிவு குறைவாக இருப்பதால், அக்டோபர் 22 - 29 தேதி வரை இயக்கப்பட இருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM