முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் மழையின் காரணமாக ரத்து
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கிளல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, நெல்லை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. தென்காசி
முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் மழையின் காரணமாக ரத்து


சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கிளல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, நெல்லை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது.

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களுக்கு தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர் முக ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள இருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலினின் தென்காசி பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b