Enter your Email Address to subscribe to our newsletters
சென்னை, 21 அக்டோபர் (ஹி.ச.)
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் மழை நீரோடு, கிருஷ்ணா நதி நீரும் வருகையால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தானது ஆயிரம் கன அடிக்கு மேல் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏரியின் நீர்மட்ட உயரம் 21 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது அது மட்டும் இன்றி ஏரிக்கு நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், நேமம் ஆகிய ஏரிகளிலும் நீர் அதிக அளவில் இருப்பதால் எந்த நேரத்திலும் திறந்து விடப்படும் சூழல் உள்ளது.
எனவே முதற்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
இதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் ஏரியின் நீர்மட்டத்தை 21 அடியை நெருங்க விடாமல் அதற்கு கீழே வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் அதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதாலும் அதுபோன்ற நேரங்களில் அதிக உபரொ நீர் திறந்து வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருப்பதற்காக ஏரியின் நீர்மட்டத்தை 21 அடிக்கு கீழ் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக குன்றத்தூர், திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், வழுதலம்பேடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது நீரின் வரத்து மற்றும் மழையின் தாக்கத்தை பொறுத்து உபரி நீர் திறக்கப்படுவது மேலும் அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முடிந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை முடிந்து ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது
Hindusthan Samachar / Durai.J